உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  லக்னோ செல்லும் திண்டுக்கல் மாணவர்கள்

 லக்னோ செல்லும் திண்டுக்கல் மாணவர்கள்

திண்டுக்கல்: லக்னோவில் நடைபெறும் சாரண, சாரணிய இயக்கத்தில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பாரத சாரண - சாரணிய இயக்கத்தின் சார்பாக 19-வது தேசிய பெருந்திரள் அணி நவம்பர் 23 ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்க உள்ளது. தமிழகத்தின் சார்பில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்திலிருந்து அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த 8 சாரண மாணவர்களும் ஒரு ஆசிரியரும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ வாழ்த்தி வழியனுப்பினார். திண்டுக்கல் கல்வி மாவட்ட சாரணச் செயலர் சந்திரசேகரன், பொருளாளர் கங்காதரன், சாரண அமைப்பு ஆணையர் பாலமுருகன், மாவட்ட உதவி செயலர் ஜான் கிரிஸ்டோபர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்