உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு மருத்துவமனை நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனை நோயாளிகள் அவதி

கொடைக்கானல் : கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மெத்தை, படுக்கை விரிப்புகள் சரியில்லாததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இங்கு பல மாதங்களாக சலவை செய்யப்படாத கம்பளி, படுக்கை விரிப்புகளால் துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. நோயாளிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், ''பணியாளர் பற்றாக்குறையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் கம்பளி, மெத்தை விரிப்பான் வழங்கவும்; காலி பணியிடங்களை நிரப்பவும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ