குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்; பராமரிப்பின்றி பாழ்
திண்டுக்கல் மாவட்டத்தில் போதுமான குடிநீர் திட்டங்கள் உள்ளன.இதன் காரணமாக பெரும்பாலான நகர்,கிராமங்களில் முறையாக குடிநீர் சப்ளையாகிறது .ஆனால் முறையான பாராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கு குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரும் ரோடுகளில் வீணாகிறது.இந்நேரங்களில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது .இது போன்ற குழாய் உடைப்புகளை சரிசெய்வதில் துறை அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதால் மக்கள் பாதிக்கின்றனர். இதனை முறையாக பாராமரிக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.