உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முருங்கைக்காய் விவசாயிகள் ஏமாற்றம்

முருங்கைக்காய் விவசாயிகள் ஏமாற்றம்

ஒட்டன்சத்திரம் : முருங்கைக்காய் அதிக விலைக்கு விற்ற போதிலும் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.ஒட்டன்சத்திரம் பகுதியில் தக்காளி, முருங்கை, வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இவை ஒரே ஆண்டில் உச்சபட்ச விலைக்கு விற்பதும், விலை மிகவும் குறைந்து வீதியில் கொட்டப்படுவதும் வழக்கமாக நடக்கிறது. சமீபத்தில் பெய்த கோடை மழை காரணமாக முருங்கை செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்தன. இதனால் முருங்கை மகசூல் கடுமையாக பாதிப்படைந்தது. மார்க்கெட்டில் முருங்கை வரத்து மிகவும் குறைந்து போய் விலை உச்சபட்சமாக உள்ளது. உள்ளூர் வரத்து மிகவும் குறைந்து போனதால் பற்றாக்குறையை சமாளிக்க நாசிக் பகுதியில் விளைந்த முருங்கை விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. நேற்று நாசிக் முருங்கை கிலோ ரூ.200க்கு விற்றது. முருங்கை விலை அதிக விலைக்கு விற்ற போதிலும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை