உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சதம் அடித்தது முருங்கை விலை

 சதம் அடித்தது முருங்கை விலை

ஒட்டன்சத்திரம்: வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.140க்கு விற்பனையானது. ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி, காவேரியம்மாபட்டி, இடையகோட்டை மார்க்கம்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் முருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது. பனி மற்றும் மழை காரணமாக முருங்கை செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்து விட்டதால் மகசூல் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வரத்து குறைந்ததால் முருங்கை விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கை ரூ.85க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று வரத்து மிகவும் குறைந்ததால் கிலோ ரூ.140க்கு விற்பனையானது. இனி வரும் நாட்களில் வரத்து இன்னும் குறையக்கூடும் என்பதால் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி