உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலையடிவாரத்தில் இ-பாஸ் சோதனை; நெரிசலை தவிர்க்க நேற்று முதல் நடைமுறை

மலையடிவாரத்தில் இ-பாஸ் சோதனை; நெரிசலை தவிர்க்க நேற்று முதல் நடைமுறை

கொடைக்கானல் : கொடைக்கானல் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்ட நிலையில் வாகன நெரிசலை தவிர்க்க நேற்று முதல் மலையடிவாரங்களிலே சோதனை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.இங்கு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி 2023 மே 7 முதல் இபாஸ் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் சுணக்கம் ஏற்பட நீதிமன்றம் கடுமை காட்டியது. இதை தொடர்ந்து கொடைக்கானல் செல்லும் அனைத்து உள்ளூர், வெளியூர் வாகனங்களுக்கு இ பாஸ் முறை கட்டாயம் என்ற முறை உருவானது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் இச்சோதனை நடைபெறும் நிலையில் துரிதமில்லாத இணையதள வசதி, ஸ்கேன் செய்வது, இ-பாஸ் இல்லாத வாகனங்களுக்கு உடனடி அனுமதி வழங்குவதில் சிக்கல் போன்றவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இவ்விடத்திலே 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர் பாட்டில் , குளிர்பானங்கள் கொண்டு செல்லப்பட்டதா என்ற சோதனையும் நடைபெற்றதால் வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையால் கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள காமக்காப்பட்டி போலீஸ் சோதனை சாவடி, தர்மத்துப்பட்டி, வடகாடு, சித்தரேவு வன சோதனை சாவடி, பாலசமுத்திரம் போலீஸ் சோதனை சாவடிகளில் ஸ்கேன் செய்து வாகனங்களை அனுப்பும் முறை நேற்று முதல் தொடங்கப்பட்டது. இதை திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார். மேலும் 5 லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில் வைத்திருக்கும் நிலையில் தலா ரூ.20 பசுமை வரி விதிக்கப்பட்டு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக இ-பாஸ் வசதி பெற மெயின் ரோட்டில் உள்ள உணவகங்கள், விடுதிகள், பெட்ரோல் பங்க், கடைகள், பஸ் நிறுத்தங்களில் இ பாஸ் முகவரி, விழிப்புணர்வு வாசகங்கள், படங்கள் கூடுதலாக அச்சிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ