| ADDED : பிப் 04, 2024 05:51 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் மூன்று நாட்கள் நடந்த தடகளம் மண்டல போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை ஈரோடு அணி வென்றது.திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தாடிக்கொம்பு ரோட்டிலுள்ள மாவட்ட விளையாட்டுஅரங்கில் கோவை மேற்கு, சேலம் மண்டல அலுவலர், பணியாளர்களுக்கான மண்டல விளையாட்டு போட்டி நடந்தது. 400 வீரர்கள், 30க்கு மேற்பட்ட நடுவர்கள் பங்கேற்றனர். மூன்று நாட்களாக நடந்த போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை ஈரோடு அணி வென்றது. துறை ரீதியான போட்டியில் கிருஷ்ணகிரி அணி முதலிடம், திண்டுக்கல் அணி 2ம் இடம், ஈரோடு அணி மூன்றாம் இடங்களை பிடித்தது. வெற்றி பெற்ற வீரர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுகின்றனர். இதற்கான பரிசளிப்பு விழா துணை இயக்குனர் கல்யாணகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன்வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் நன்றி கூறினார்.