மேலும் செய்திகள்
ரோட்டில் விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பு
27-Apr-2025
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பண்ணைக்காடு ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது.நேற்று முன்தினம் இரவு 3 மணி நேரம் கொட்டிய கனமழையால் கடுகுதடி பகுதியில் ராட்சத மரம் ரோட்டில் விழுந்தது.கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவித்த போதும் தாமதமான நிலையில் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது குறிப்பிடத்தக்கது.
27-Apr-2025