மேலும் செய்திகள்
சேவல் சண்டை சூதாட்டத்தில் நால்வர் கைது
03-Jan-2026
நத்தம்: நத்தம் இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் தலைமையிலான போலீசார் குட்டுப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சேவல் சண்டை நடத்திய சாத்தாம்பாடியை சேர்ந்த பிரபாகரன் 30, குட்டுப்பட்டியை சேர்ந்த பெருமாள் 23, ஆறுமுகம் 22, ஆகியோரை கைது செய்தனர். சிலர் தப்பினர். இவர்களிடம் இருந்து சேவல், டூவீலர்களை பறிமுதல் செய்தனர். வடமதுரை : அய்யலுாtர் முடக்குப்பட்டி பகுதியில் வடமதுரை எஸ்.ஐ., தாவூது உசேன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது சேவல்களை சண்டையிட செய்து சூதாட்டம் நடத்திய திருச்சி மாவட்டம் கே.புதுக்கோட்டை கார்த்திக் 29, 17 வயது சிறுவன் என இருவரை கைது செய்தனர். 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
03-Jan-2026