உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பழிக்கு பழியாக கொலை; ஐவர் கைது

 பழிக்கு பழியாக கொலை; ஐவர் கைது

பழநி: பழநி தெரசம்மாள் காலனியை சேர்ந்தவர்கள் பிரவீன் 27, சின்னத்தம்பி. முன்விரோதம் காரணமாக ஜன.4 இரவு பிரவின் கழுத்தை கத்தியால் அறுத்து சின்னத்தம்பி கொலை செய்தார். ஜாமினில் வெளியேவந்த சின்னத்தம்பி நேற்று முன்தினம் (நவ.17) இரவு கோதைமங்கலம் அருகே உள்ள மதுக்கடையில் மது அருந்தினார். அப்போது இவரை பிரவீனின் உறவினரான தெரசம்மாள் காலனியை சேர்ந்த சூர்யா 20, அவரது நண்பர்கள் ஆரோக்கிய ரோஸ் 29, சிவசங்கர் 20, விஜய் ஆதித்யா 20, மேயர் முத்து 31, ஆகியோர் கத்தியால் கழுத்தை அறுத்தனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். பழநி டவுன் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி