மேலும் செய்திகள்
ரயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல்
19-Aug-2025
திண்டுக்கல்:மேற்குவங்க மாநிலம் புருலியா- திருநெல்வேலி அதிவிரைவு ரயிலில் திருச்சி-- திண்டுக்கல் வழித்தடத்தில் கஞ்சா கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி, எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையில் போலீசார் இன்ஜின் அருகே பொதுப்பெட்டியில் சீட்டுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் 5.200 கிலோகிராம் கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்து போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவில் ஒப்படைத்தனர். கஞ்சா கடத்தியவர்கள் குறித்து மேல் விசாரணை நடக்கிறது.
19-Aug-2025