உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிராமங்களை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்; தேவை துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை

கிராமங்களை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்; தேவை துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை

மாவட்டம் முழுவதும் 350க்கு மேற்பட்ட கிராமப்பகுதிகள் உள்ளன. நகர் பகுதிகள் விரல்விட்டும் எண்ணும் அளவிற்கே உள்ளன. நகர் பகுதிகளுக்கும், முக்கியமான இணைப்பு பகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து அதிகளவில் இருக்கிறது. ஆனால் கடைகோடி கிராமங்களின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இல்லை என்ற புகார்கள் தொடர்ந்து எழுகின்றன. எங்கள் பகுதிகளுக்கு பஸ்கள் இல்லை, பள்ளி மாணவர்கள் அவதி என கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் தொடர்ந்து பொதுமக்கள் புகார்கள் அளித்த வண்ணமே இருக்கின்றனர். குறிப்பாக கொரோனா காலத்திற்குப்பின் இது அதிகரித்துள்ளதாக தெரிகிறது. போக்குவரத்து பணியாளர்கள் புதிய நியமனம் இல்லை என்பதுதான் மிகவும் பிரதானமான காரணமாக இருக்கிறது. இதனால் கிராமப்பகுதிகளை எவரும் கண்டு கொள்வதில்லை. ஷேர் ஆட்டோ, மினிவேன், டாடா ஏஸ் போன்ற சரக்கு வாகனங்களில் தான் பெரும்பாலான மக்கள் பஸ் வசதி இருக்கும் இடத்திற்கு வந்து அங்கிருந்து நகர் பகுதிகளுக்கு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பஸ்களே இல்லை என்பதுதான் நிதர்சமான உண்மையாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஜன 11, 2024 10:01

இதுவோ சரியான திட்டம்தான் . அரசு பேருந்துகள் சுற்றுசூழல் மாசுபடுத்துகின்றன. எனவே இவற்றை நிறுத்தியது மிகவும் சரியானதே. மக்கள் அவர்களின் சைக்கிள், இருசக்கர வண்டி காலை உபயோகிக்க கற்றுக்கொள்ளவேண்டும். பள்ளி மாணாக்கர்கள் சைக்கிள் செல்ல பழகவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை