உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சின்னாளபட்டியில் நாளை நடக்கிறது ஹேண்ட்பால்; அணி வீரர்கள் தேர்வு

சின்னாளபட்டியில் நாளை நடக்கிறது ஹேண்ட்பால்; அணி வீரர்கள் தேர்வு

சின்னாளபட்டி ; சப்-ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கான திண்டுக்கல் மாவட்ட ஹேண்ட்பால் அணி வீரர்கள் தேர்வு சின்னாளபட்டியில் நாளை (நவ. 15) நடக்க உள்ளது.மாநில அளவிலான இப்போட்டிகள் நவ. 23, 24ல் திருவண்ணாமலையில் நடக்க உள்ளது. இதில் 2010 ஜன. 1க்கு பின் பிறந்த மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதற்கான திண்டுக்கல் மாவட்ட அணி வீரர்கள் தேர்வு சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளியில் நாளை ( நவ. 15) மதியம் 2:00 மணிக்கு துவங்குவதாக திண்டுக்கல் மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷன் செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பங்கேற்க விரும்புவோர் பயிற்சியாளர் அசோக்குமாரிடம் 96299 22596 ல் போட்டிகளுக்கான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை