தாண்டிக்குடியில் காட்டு மாடு தாக்கி குதிரை பலி
தாண்டிக்குடி: தாண்டிக்குடியில் காட்டுமாடு தாக்கி வளர்ப்பு குதிரை பலியானது. திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு. இவர் வளர்ப்பு குதிரை மூலம் சுமை துாக்கி பிழைப்பு நடத்தி வருகிறார். பண்ணைக்காடு ரோட்டில் விவசாயத் தோட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற குதிரையை அவ்வழியே வந்த காட்டுமாடு தாக்கியதில குடல் சரிந்து பலியானது. வனத்துறையினர் பலியான குதிரையை பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இரு தினங்களுக்கு முன் பூலத்துாரில் விவசாயி பால்பாண்டியன் காட்டுமாடு தாக்கி பலியானது. அடுத்து, தாண்டிக்குடி பள்ளத்துகால்வாய் கிராமத்தில் புகுந்த காட்டு யானையால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் வனவிலங்கு தாக்குதலின் போது அப்போது எம்.எல்.ஏ., வாக இருந்த தற்போதைய எம்.எல்.ஏ., செந்தில்குமார் வனவிலங்கு நடமாட்டத்தை கட்டுப்படுத்த தங்களது ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்த பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லாதது விவசாயிகளிடையே கவலைஅளித்துள்ளது.