கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
நிலக்கோட்டை:திண்டுக்கல்மாவட்டம் சிலுக்குவார்பட்டி அருகே கணவரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். சொக்குபிள்ளைபட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் 40. பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் தற்காலிக துாய்மை பணியாளராக இருந்தார். இவருக்கு மனைவி பழனியம்மாள் 34 மற்றும் 9, 8 வயதில் இரு மகன்கள் உள்ளனர். பழனியம்மாளுக்கு அதே பகுதியை சேர்ந்த சூர்யா 33, உடன் தொடர்பு இருந்தது. இதை மாரியப்பன் கண்டித்துள்ளார்.பழனியம்மாள் கேட்க மறுத்ததால் சிலுக்குவார்பட்டி எல்லைச்சாமிபுரத்திற்கு குடி பெயர்ந்தனர். ஆனாலும் அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனால் மாரியப்பன் மீண்டும் கண்டித்ததால் ஆத்திரமடைந்த பழனியம்மாள், சூர்யா உடன் சேர்ந்து நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்த மாரியப்பன் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இருவரையும் நிலக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.