உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அமைச்சர்களிடம் கையேந்தி திட்ட பணிகளை பெறுகிறேன் வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் உருக்கம்

அமைச்சர்களிடம் கையேந்தி திட்ட பணிகளை பெறுகிறேன் வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் உருக்கம்

வடமதுரை: ''தொகுதிக்குள் வளர்ச்சி திட்ட பணிகளை கொண்டு வர அமைச்சர்களிடம் கையேந்தி பிச்சை பெறுவது போல் சிரமப்பட்டு வாங்கி வருகிறேன். எனவே இடையூறு செய்யாமல் பணிகள் முழுமையாக அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்'' என வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் பேசினார்.வடமதுரையில் ரூ.1.45 கோடி மதிப்பிலான புதிய பேரூராட்சி அலுவலக கட்டட பணியை துவங்கி வைத்த அவர் பேசியதாவது:நான்கரை ஆண்டுகளில் கால்நடை கிளை நிலையங்கள் துவங்க தமிழகத்தில் 45க்கு மட்டுமே மத்திய அரசு அனுமதித்தது. 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் அவற்றில் ஒன்றை வடமதுரை ஒன்றியம் வளவிசெட்டிபட்டிக்கு வாங்கினேன். இதற்காக துறை அமைச்சரிடம் பல முறை சென்று வலியுறுத்தினேன். பேரூராட்சி புதிய அலுவலக கட்டடம், சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அன்னதான கூடம் என ஏதுவும் எளிதாக கிடைக்கவில்லை. அமைச்சர்களிடம் கையேந்தி பிச்சை எடுப்பது போன்று திட்ட பணிகளை சிரமப்பட்டு பெற்று வருகிறேன். அதிகாரிகள் ஏதாவது காரணங்களை காட்டி திட்ட பணிகள் நிறைவேற சிக்கல் ஏற்படுத்தாமல் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன், துணைத் தலைவர் மலைச்சாமி, செயல் அலுவலர் பத்மலதா, தி.மு.க., நகர செயலாளர் கணேசன், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பாண்டிபங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி