உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாய்ப்பு தந்தால் ஆதரவுகுலாலர் சங்கம்

வாய்ப்பு தந்தால் ஆதரவுகுலாலர் சங்கம்

திண்டுக்கல : ''சட்டசபை தேர்தலில் எங்களுக்கு வாய்ப்பு தரும் கட்சிக்கு லோக்சபா தேர்தலில் ஆதரவு தருவோம்,''என தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் குலாலர் சங்க மாநில தலைவர் நாராயணன் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: பிப்.4ல் கோபால்பட்டியில் எங்கள் சங்கம் சார்பில் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டில் 17 தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளது. முதல் கட்டமாக மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்காக எடுக்கும் மண்ணுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருவதால் மண்பாண்ட தொழில் பயிற்சி கல்லுாரிகளை ஏற்படுத்த வேண்டும். எங்களின் வாழ்வுரிமையை காப்பாற்ற வேண்டும். அரசு நிவாரணத்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். சட்டசபை தேர்தலில் எங்கள் சங்கத்தை சேர்ந்த நால்வருக்கு சீட் வழங்க வேண்டும். இதற்கு உறுதியளிக்கும் கட்சிக்கு லோக்சபா தேர்தலில் நாங்கள் ஆதரவு தருவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ