உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  திண்டுக்கல், கொடையில் இடைவிடாத மழை

 திண்டுக்கல், கொடையில் இடைவிடாத மழை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கண்ணாமூச்சி காட்டி வந்த மழை நேற்று சாரல் மழையாக நாள் முழுவதும் பெய்து பூமியை குளிர்வித்தது. மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகள், பழநி, வத்தலகுண்டு, சின்னாளப்பட்டி, வேடசந்துார் என பிற பகுதிகளில் நகர், புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கு அச்சாரமிட்டாலும் மழை பெய்யாமல் சில நாட்களாக ஏமாற்றி வந்தது. நேற்று காலை முதலே நகர் பகுதியில் வெயிலே தெரியாத அளவிற்கு மேகமூட்டங்கள் நகரை சுற்றி இருந்தன. தொடர்ந்து சாரலாக பெய்ய தொடங்கிய மழை நாள் முழுவதும் நீடித்தது. இதனால் நகரில் குளிர்ச்சி ஏற்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நிலக்கோட்டையில் 12.20 மில்லிமீட்டர் மழை பெய்தது. திண்டுக்கல் 3 ,நத்தம் 3.50 , சத்திரபட்டி 5.20 ,பழநி 2 ,பிரையண்ட் பூங்கா 8.80 மி.மீட்டர் மழை பதிவானது. மழையால் மங்கள் முறிந்து விழுந்தன. கொடைக்கானல்: சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானல், தாண்டிக்குடியில் வறண்ட வானிலை நீடித்து பனியின் தாக்கம் அதிகரித்தது.நேற்று காலை மழை தொடங்கி இடைவிடாது மாலை வரை மிதமாக பொய்து கொண்டே இருந்தது . குறைவான சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில் விடுதிகளிலே முடங்கினர். நகரை பனிமூட்டம் சூழ்ந்து வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏரிச்சாலையில் பயணிகள் சைக்கிள், குதிரை சவாரி செய்தனர். பூம்பாறை கரும்பாறையில் மழைக்கு மரம் விழுந்து 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. கொடைக்கானல் மேல்மலை , தாண்டிக்குடி கீழ்மலையில் தொடர் மின்தடை ஏற்பட்டது. மின்தடையால் தொலை தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை