உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி செல்வது அதிகரிப்பு! போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை

ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி செல்வது அதிகரிப்பு! போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்டோக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மாவட்டத்தில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு ஆட்டோக்கள் முக்கிய காரணங்களாக உள்ளது. விதிமீறும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலரால் போக்குவரத்து நெரிசல் மட்டுமில்லாமல் சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. கூட்டமான இடங்களில் கூட வேகத்தை குறைக்காமல் பின்னால் வரும் வாகனங்களை கவனிக்காமல் திருப்புதல் செய்கை,இன்டிகேட்டர் போன்றவற்றை பயன்படுத்தாமல் திருப்புதல், போன்ற செயல்களால் ரோட்டில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றனர். விதி மீறலில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் பாதிக்கப்படும் வாகன ஓட்டுநர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி ரகளையில் ஈடுபடுகின்றனர். பள்ளி திறந்து செயல்படும் நிலையில் பள்ளி குழந்தைகளை ஆட்டோக்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக பயணிகளை ஏற்றி செல்கின்றனர். ஆட்டோவில் பயணிக்கும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் அனுப்பும் பெற்றோர்கள் குழந்தைகள் செல்லும் ஆட்டோவில் பயணிக்கும் நபர்களுக்கு எண்ணிக்கை குழந்தைகள் அமருமிடம் ஆகியவை குறித்து கண்காணிக்க வேண்டும் போலீசார் அதிக குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

GRDhejesh
ஜூன் 18, 2024 08:06

கொடுங்கையூர் மூலக்கடை பகுதியில் ஆட்டோகார்ர்கள் செய்யும் அட்டுழியத்திற்கு அளவேயில்லை பல முறை புகாரளித்தும் பலனில்லை முக்கால் வாசி ஆட்டோக்களின் உரிமையாளர்கள்


சிந்தனை
ஜூன் 17, 2024 20:23

என்னை என்பதெல்லாம் கணக்கு இல்லை... சட்டத்தில் என்ன இருக்கிறது என்பது மட்டும்தான் கணக்கு.... நடைமுறையில் மாறினாலும் கூட போலீசுக்கு ஒழுங்காக லஞ்சம் போகிறதா என்பதும் கணக்கு...


A.Gomathinayagam
ஜூன் 17, 2024 14:24

அதிகாரிகள் கண் முன்னாள் தானே நடக்கிறது .கண்டு கொள்வதில்லை பல அழுத்தங்கள்


Raa
ஜூன் 17, 2024 13:06

கொலைகார பெற்றோர்கள். போக்குவரத்து போலீஸ் எதையெல்லாம் விட்டுவிடுவார்.. ஓடி ஓடி போய் ஹெல்மெட் போடாத இருசக்கரவாகனங்கள், நகரத்துக்குள் வந்த லாரி ஆகியவைகளை பிடித்து பையை ரொப்புவார்கள்.


ஜெகதீஷ்
ஜூன் 17, 2024 08:10

நடவடிக்கைதானே... மாமூல் நடவடிக்கை நடந்துக்கிட்டே இருக்குது. இருக்கும்.


Mani . V
ஜூன் 17, 2024 06:05

அதெல்லாம் அடுத்த பண்டிகை வரும்பொழுது நாங்களே நடவடிக்கை எடுப்போம்.


rama adhavan
ஜூன் 17, 2024 05:06

ஆட்டோ ஓட்டுநர்களை மட்டுமன்றி குழந்தைகளின் பெற்றோரும் பொறுப்பே. எனவே அவர்களையும் தண்டிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை