உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் மாநகராட்சியில் 24x7 அறிமுகம்

திண்டுக்கல் மாநகராட்சியில் 24x7 அறிமுகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் குடிதண்ணீர் விணாவதை தடுக்கும் வகையில் ரூ.9 கோடியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 24 x 7 தண்ணீர் திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான பணி விரைவில் துவங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.திண்டுக்கல் மாநகராட்சி யில் கோடை நேரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில் 2,3,9 உள்ளிட்ட 3 வார்டுகளை இணைத்து ரூ.9 கோடியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 24 x 7 தண்ணீர் திட்டம் அறிமுகப்படுத்த உள்ளது. 0.9 சதுர கிலோ மீட்டரை கொண்ட இந்த வார்டுகளில் 16,619 பேர் வசிக்கின்றனர். 3426 குடிநீர் இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 14லட்சம் லிட்டர் உயர் மட்ட குடிநீர்தொட்டி அமைத்து அதிலிருந்து எல்லா வீடுகளுக்கும் தனித்தனியாக 706 மீட்டர் துாரத்திற்கு தண்ணீர் இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளது. இதன்மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் பைப்களை திறந்தால் 24 மணி நேரமும் தண்ணீர் வரும். எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ள என்பதை குறிக்க ரீடிங் மீட்டர் பெட்டிகளும் பொருத்தப்படுகிறது. இதற்காக பிப்.23ல் டெண்டர் விடப்படுகிறது. இதன்மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி