ஜல்லிக்கட்டு நிறுத்தம்
நத்தம்: நத்தம் அருகே சொறிப்பாறைப்பட்டி சங்கரன்பாறை முத்துமாரியம்மன், பாலமுருகன் கோயில் விழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் 2 நாட்களாக பலத்த மழை பெய்ய வாடிவாசல் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.