உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆப் சீசனில் பூத்துக்குலுங்கும் கொடை ரோஜா பூங்கா

ஆப் சீசனில் பூத்துக்குலுங்கும் கொடை ரோஜா பூங்கா

கொடைக்கானல்:- கொடைக்கானல் ரோஜா பூங்கா சீசனுக்கு பின்னும் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குகிறது.கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் முழு அளவிலான கோடை சீசன் துவங்கியது. ஆனால் தொடர் மழை, மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் பூக்கள் பூப்பது தாமதமானது. சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்திருந்தது. தற்போதைய ஆப் சீசனில் அப்சர்வேட்டரியில் 10 ஏக்கரில் உள்ள ரோஜா பூங்காவில் 1500 வகையான ரோஜா, 16 ஆயிரம்செடிகளில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கிறது. பயணிகள் ரசித்துச் செல்கின்றனர். வழக்கமாக சீசனுக்கு பின் ரோஜா பூப்பது குறைவாக இருக்கும். தற்போதைய சீதோஷ்ண நிலையால் இவை பூத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ