போக்குவரத்து நெரிசலால் திணறியது கொடை
கொடைக்கானல்:கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நேற்று 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தரைப்பகுதியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க குளு குளு குளு நகரான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் முகாமிடுகின்றனர். நேற்று அவர்கள் வந்த வாகனங்களால் நகரில் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உகார்தே நகர், சீனிவாசபுரம், மூஞ்சிகல்,ஏரிச்சாலை சந்திப்பு, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நெரிசலை போலீசார் சீரமைத்தனர். போக்குவரத்து மாற்றம், பார்க்கிங் வசதி உள்ளிட்டவை செய்த போதும் இங்கு நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.