உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மல்லீஸ்வரன் கோயிலில் தீ வைப்பு

மல்லீஸ்வரன் கோயிலில் தீ வைப்பு

கொடைரோடு: நிலக்கோட்டை-சிலுக்குவார்பட்டி ரோட்டில் ஹிந்து அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான மன்னவராதி கோவில்மேடு மல்லீஸ்வரர் கோயில் உள்ளது, இங்கு விநாயகர், பைரவர், துர்கை, முருகன், நவக்கிரக சன்னிதி , பரிவார தெய்வங்கள் உள்ளன.நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் உள்ள வைப்பறையில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இங்கு வைக்கப்பட்ட தீ கோயிலில் அன்னதானத்திற்காக வைக்கப்பட்ட அரிசி, பருப்பு, விறகு, பிளாஸ்டிக் சேர், பாத்திரங்கள்,எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சாம்பலாயின,கோயில் நிர்வாகிகள தண்ணீர் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டதால் பிரதான சின்னங்கள், பழமையான கல்வெட்டுக்கள், ஓவியங்கள்,பழமையான சிலைகள் பாதுகாக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ