உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மயிலாடுதுறை ரயில் வழி மாற்றம் திண்டுக்கல் பயணிகள் ஏமாற்றம்

மயிலாடுதுறை ரயில் வழி மாற்றம் திண்டுக்கல் பயணிகள் ஏமாற்றம்

திண்டுக்கல்:தண்டவாள பராமரிப்பு பணிகளால் செங்கோட்டையிலிருந்து திண்டுக்கல் வழியாக மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று திண்டுக்கல் வராமல் மாற்று வழியில் சென்றது. ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல்லுக்கு காலை 11:15 மணிக்கு வரும். மணப்பாறை-கொளத்துார் இடையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் இந்த ரயில் நேற்று திண்டுக்கல் வராமல் மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மயிலாடுதுறை சென்றது. இந்த ரயிலுக்காக திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பலமுறை ரயில்வே நிர்வாகம் இதேபோல் தான் முன்னறிவிப்பின்றி ரயில்களை மாற்று வழியில் இயக்குகிறது. இதனால் பயணிகள் தான் அவதிப்படுகின்றனர். இதற்கு முன்னறிப்பு அவசியம் என்கின்றனர் ரயில் பயணிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை