உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிதைந்த ரோடால் திணறும் வாகன ஓட்டிகள்

சிதைந்த ரோடால் திணறும் வாகன ஓட்டிகள்

நெரிசலால் அவதிதிண்டுக்கல் மேற்கு ரத வீதியில் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சரக்கு லாரியை நடுரோட்டில் நிறுத்தி சரக்குகளை இறக்குவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .முத்துக்குமரன் ,திண்டுக்கல்..................----சிதைந்த ரோடுபிலாத்தில் தென்னம்பட்டி ரோடு குறுகி வளைவு பகுதியில் சாக்கடை கட்டமைப்பு சிதைந்து கிடக்கிறது. இதனால் ரோடு விளம்பில் இருக்கும் பெரும் பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்துக்களை சந்திக்கின்றன. இதை சீரமைக்க வேண்டும். - திருமலைச்சாமி, பிலாத்து..................------பள்ளத்தால் விபத்துவேம்பார்பட்டி செடிப்பட்டி ரோடு சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து, பள்ளங்கள் உருவாக மழையில் தண்ணீர் நிறைந்து வாகனங்கள் செல்ல தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைவதுடன் விபத்து அபாயம் உள்ளது. நிஷாந்த், செடிப்பட்டி................--------தாழ்வான கேபிள் வயர்கள்திண்டுக்கல் பழைய கரூர் ரோடு அருகே மின்கம்பத்தில் கேபிள் வயர்கள் தாழ்வாக உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.சில இடங்களில் தரையில் கிடைக்கிறது .வாகனங்களில் செல்வோர் பாதசாரிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர் . சின்னசாமி, திண்டுக்கல்....................---------தெருநாய்கள் தொல்லைகூம்பூர் அருகே எல்லாப்பட்டி ரோட்டில் அதிகமாக தெருநாய்கள் உள்ளது .பள்ளி மாணவர்கள் ,இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி கடிக்கிறது .இது தொடர்பாக பலமுறை கூறியும் யாரும் நடவடிக்கை இல்லை . இதை கட்டுப்படுத்த வேண்டும் . நாகராஜன், தென்றல்நகர்.............---------நடைமேடை சேதம்திண்டுக்கல் - பழநி ரோடு நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே சாக்கடை நடைமேடை சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் கீழே விழுகின்றனர் . இதை சரிசெய்ய வேண்டும்.விக்னேஷ், திண்டுக்கல்.................----------குப்பபையால் தொற்றுபழநி அடிவாரம் கிழக்கு பாட்டாளி தெரு தனியார் பள்ளி அருகே குப்பையை குவித்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை சிதறி கிடப்பதால் கடந்து செல்லும் பக்தர்கள், பாதசாரிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது . இதற்கோர் வழி காண வேண்டும். கார்த்திகா, பழநி....................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ