உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காட்டு யானைகள் நடமாட்டம்

காட்டு யானைகள் நடமாட்டம்

பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் பேரூராட்சி பாலாறு,பொருந்தலாறு வனப்பகுதிகளில் யானை நடமாட்டம் அடிக்கடி உள்ளது. கடந்த சில நாட்களாக பொருந்தல் புளியம்பட்டியில் காட்டு யானைகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இரண்டு குட்டிகளுடன் யானைகள் உலா வருவது போன்று மலையடிவாரப் பகுதியிலிருந்த தோட்டத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. யானைக்கு தொந்தரவு செய்யக்கூடாது. யானைகளை பார்க்க நேர்ந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !