உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  உலக சாதனை புரிந்த நத்தம் பள்ளி மாணவர்

 உலக சாதனை புரிந்த நத்தம் பள்ளி மாணவர்

நத்தம்: -பெங்களூரு யூனிட்டி யுனிவர்ஸ் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் காணொளி மூலமாக உலக சாதனை முயற்சிக்காக நேற்று தமிழ்அன்னை உருவ படத்தில் ஐம்பெரும் காப்பியங்கள் ,பாடல்களை ஒவிய வடிவில் எழுதும் போட்டியை நடத்தியது. நத்தம் அசோக்நகரை சேர்ந்த குழந்தைவேலு மகனும் நத்தம் ராம்சன்ஸ் பள்ளி 8-ம் வகுப்பு மாணவருமான சுஜய் 6 அடி நீளமுள்ள தமிழ்அன்னை படத்தில் ஐம்பெரும் காப்பியங்கள் , வளையாபதி பாடல்களை எழுதும் பணியை தனது வீட்டில் தொடங்கினார். காலை 7 :00மணிக்கு எழுத தொடங்கிய மாணவர் இரண்டரை மணி நேரத்தில் அனைத்தையும் எழுதி சாதனை படைத்தார். மாணவரை பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !