உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மரங்கள் வளர்ப்பை ஊக்கப்படுத்த நாற்றுப்பண்ணை

 மரங்கள் வளர்ப்பை ஊக்கப்படுத்த நாற்றுப்பண்ணை

மோர்பட்டி ஊராட்சியை பசுமை பகுதியாக மாற்றிமைக்கும் ஆர்வத்துடன் ஊராட்சி நிர்வாகம் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியை செய்கிறது. மாவட்டத்தில் இதர பகுதியில் கிடைக்கும் மழையளவை காட்டிலும் வேடசந்துார் பகுதியில் குறைவாகவே உள்ளது. பல ஆண்டுகளாக வறட்சி பாதிக்கும் பகுதியாகவே வேடசந்துார் தொகுதி நீடிக்கிறது. இங்கு மழை பொழிவு குறைய மரங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டதும் முக்கிய காரணமாகும். இப்பகுதியில் அழிக்கப்பட்ட மரங்கள் எண்ணிக்கையை மீண்டும் உருவாக்கும் நடவடிக்கைகளில் அரசு, தனியார் அமைப்புகள் ஆர்வம் காட்ட துவங்கியிருப்பது மகிழ்ச்சியான விஷயம். தனியார் முயற்சிகளை தொடர்ந்து தற்போது மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் வடமதுரை ஒன்றியத்தில் மோர்பட்டி கொல்லப்பட்டி, பி.கொசவபட்டி, குளத்துார் சந்தனதேவர்நகர், பாடியூர் கிரியம்பட்டி, சுக்காம்பட்டி அயனாம்பட்டி உட்பட பல இடங்களில் குறுங்காடுகள் அமைக்கப் பட்டுள்ளன. மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், பலனை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்முன்னே பார்க்கக்கூடிய சிறந்த முன்னுதாரணமாக இவை விளங்குகின்றன. மோர்பட்டி ஊராட்சியிலும் குறுங்காடுகள், ரோடு ஓரங்களில் மரக்கன்று வளர்ப்பு என ஆர்வத்துடன் பணிகள் நடக்கின்றன. தானாகவே வளர்ந்துவிடும் ஆர்.குமரவேல், ஊராட்சி செயலாளர், மோர்பட்டி: மோர்பட்டி ஊராட்சியில் மரங்கள் வளர்ப்பில் அதிக கவனம் செலுத்துகிறோம். இதற்காக 100 நாள் வேலை பணியாளர்களை கொண்டு மரக் கன்றுகளுக்கு வேலி அமைத்து பாதுகாக்கப்படுகிறது. ஏற்கனவே கோப்பம்பட்டி ரோடு பிரிவு அருகே குறுங்காடுகள் திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. தற்போது ரெட்டியபட்டி ரோடு, ஜி.குரும்பபட்டி ரோடு பகுதிகளில் இருபுறமும் மரங்கள் நட்டு பராமரிக்க துவங்கி உள்ளோம். அனைத்து ரோடுகளிலும் மரக்கன்றுகள் நடப்படும். ஒரு மரக்கன்று முதல் 3 ஆண்டுகளுக்கு பரா மரித்து வளர்த்துவிட்டாலே போதும். பின்னர் அது தானாகவே வளர்ந்து விடும். பணியாளர்கள் ஆர்வம் டி.பஞ்சவர்ணம், பி.டி.ஓ., வடமதுரை: வாய்ப்புள்ள அரசு இடங்களில் குறுங்காடுகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. இப்பகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் சப்ளை செய்யும் நோக்கில் கொல்லப்பட்டி கரிவாடன்செட்டிபட்டி ரோட்டில் நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பூவரசு, பாதாம், வேம்பு, அலங்கார கொன்னை உள்ளிட்ட பல வகை மரக்கன்றுகள் 20 ஆயிரம் எண்ணிக்கை அளவிற்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மோர் பட்டி ஊராட்சியில் அரசு இடங்களில் மரங்களை நட்டு பராமரிக்க ஊராட்சி பணி யாளர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை