சத்துணவு ஊழியர் சங்க மாநாடு
சாணார்பட்டி : சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்க வட்டார மாநாடு நடந்தது. வட்டார தலைவர் மாது கண்ணா தலைமை வகித்தார்.துணைத்தலைவர் பேபி ராணி வரவேற்றார்.அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி பேசினார். சத்துணவு பணியாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் ரோஸ்லின் நிர்மலா ராணி, மாவட்ட செயலாளர் சுந்தரி,மாநில பொதுச் செயலாளர் ஜெசி முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.