உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நடுவழியில் நின்ற பழநி சிறப்பு பஸ்

நடுவழியில் நின்ற பழநி சிறப்பு பஸ்

நத்தம் : கோபால்பட்டி அருகே பழநியிலிருந்து வந்த அரசு சிறப்பு பஸ் 50 பயணிகளுடன் பழுதாகி நடுவழியில் நின்றது. மாற்று பஸ் வராததால் நடுவழியில் வெகு நேரம் நிற்க பயணிகள் பெரும் சிரமத்தை அனுபவித்தனர்.பழநி முருகன் கோயிலில் நாளை தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி பழநிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று மாலை பழநியில் இருந்து பொன்னமராவதி நோக்கி 50க்கு மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சென்றது. கோபால்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது பஸ் பின்பக்க ஆக்சில் உடைந்து பழுதாகி நடுவழியில் நின்றது.பயணிகள் அனைவரும் இறங்கி ஒரு மணி நேரத்திற்கு மேல் நடுரோட்டில் காத்திருந்தனர். மாற்றுப் பஸ் வராததால் புலம்பியபடி அவ்வழியே சென்ற ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மூலம் கோபால்பட்டி சென்று அங்கிருந்து வேறு பஸ்களை பிடித்து சென்றனர். இதனால் கை குழந்தைகளுடன் வந்த பெண்கள் , பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். அரசு பஸ்கள் முறையாக பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி இது போன்று நடுவழியில் பழுதாவது,விபத்துக்குள்ளாவது தொடர்கிறது. அரசு பஸ்களை முறையாக பராமரிக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை