உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மண்டகப்படி ஒதுக்கீடு கோரி மறியல்

மண்டகப்படி ஒதுக்கீடு கோரி மறியல்

வத்தலக்குண்டு : வத்தலகுண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் மண்டகப்படி ஒதுக்கீடு கோரி ரோடு மறியல் நடந்தது.பழைய வத்தலகுண்டில் உள்ள இந்த கோயில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் பல்வேறு சமுதாய மக்களுக்கு மண்டகப்படி ஒதுக்கீடு உள்ளது. ஒரு பிரிவினர் தங்களுக்கும் மண்டகப்படி ஒதுக்கீடு கோரி 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜன. 19, 20ல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி நடத்திய பேச்சு வார்த்தையில் ஜன. 27ல் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் கலைந்தனர்.ஜன. 27ல் எவ்வித உத்தரவும் இல்லாத சூழலில் ஜன. 28 முதல் மீண்டும் போராட்டத்தை துவக்கினர். நேற்று காலை 10:00 மணிமுதல் வத்தலகுண்டு-பெரியகுளம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். நிலக்கோட்டை டி.எஸ்.பி., முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வத்தலக்குண்டு பைபாஸ் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இரவு 8:45 மணிக்கு கோயில் செயல் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு நாள் மண்டகப்படி ஒதுக்குவதாக கூற கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ