உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள்.........

போலீஸ் செய்திகள்.........

விபத்தில் காயம்வேடசந்துார்: குட்டத்து ஆவாரம் பட்டியைச் சேர்ந்த டிரைவர் இன்னாசி 55. வேடசந்துார் தாடிக்கொம்பு நெடுஞ்சாலையில் கிரியம்பட்டி பிரிவு அருகே டிராக்டரை ஓட்டி சென்றார். அப்போது தர்மபுரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த மாதேஷ் 31,என்பவர் ஓசூரிலிருந்து நாகர்கோவில் நோக்கி காய்கறிகள் ஏற்றி வந்த லாரி இவர் மீது மோதி காயமடைந்தார். முதியவர் பலிவடமதுரை: பிலாத்து மேற்கு தெருவை சேர்ந்த கருப்பையா 65. தனது பேரன் சந்துரு 12, உடன் பிப்.3ல் அய்யலுாரிலிருந்து டூவீலரில் ஊர் திரும்புகையில் திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் தீத்தாகிழவனுார் அவ்வழியே வந்த கார் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். (ஹெல்மெட் அணியவில்லை) திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்பையா, நேற்று இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !