மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் போராட்டம்
15-Nov-2024
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 2வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை கிண்டி மருத்துவமனை டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் டாக்டர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் டாக்டர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று முன்தினம் முதல் 50க்கு மேலான போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு பின் டாக்டர்கள் சங்கம் போராட்டத்தை கைவிட்ட நிலையில் டாக்டர்கள் பணியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நேற்றும் 2 வது நாளாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
15-Nov-2024