உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஒட்டன்சத்திரத்தில் வெண்டை முருங்கைக்காய் விலை உயர்வு

 ஒட்டன்சத்திரத்தில் வெண்டை முருங்கைக்காய் விலை உயர்வு

ஒட்டன்சத்திரம்: வரத்து குறைவால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைகாய் விலை அதிகரித்து கிலோ ரூ.190, வெண்டை கிலோ ரூ.37க்கு விற்பனை ஆனது. ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி சுற்று கிராமப் பகுதிகளில் முருங்கைகாய், வெண்டை அதிகமாக பயிரிடப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரத்து அதிகமாக இருந்ததால் முருங்கைக்காய் கிலோ ரூ.100, வெண்டைக்காய் ரூ.30க்கு விற்பனை ஆனது. தற்போது மழை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இரண்டின் விலையும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. நேற்று கிலோ முருங்கைக்காய் ரூ.190, வெண்டைக்காய் ரூ.37 க்கு விற்பனையானது. வியாபாரி ஒருவர் கூறுகையில், இனி வரும் நாட்களில் வரத்து இன்னும் குறையும் என்பதால் விலை ஏற்றமடையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ