உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வடமதுரை: வடமதுரை தும்மலக்குண்டில் பேரூர் தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுப்பையன், பேரூராட்சி தலைவர்கள் நிருபாராணி, கருப்பன் முன்னிலை வகித்தனர். நலத்திட்ட உதவிகளை வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் வழங்கினார். தலைமை நிலைய பேச்சாளர் கந்திலி கரிகாலன், மாவட்ட நிர்வாகிகள் சொக்கலிங்கம், இளங்கோ, கார்த்திகேயன், பாரதிதாசன், நகர துணை செயலாளர் வீரமணி, பொருளாளர் முரளிராஜன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், சசிக்குமார் பங்கேற்றனர். அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்