உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பஸ்க்குள் மழை; வீடியோ வைரல்

 பஸ்க்குள் மழை; வீடியோ வைரல்

நெய்க்காரப்பட்டி: பழநியில் இருந்து ஒட்டனைபுத்துார் செல்லும் பஸ்சில் மழை நீர் விழ பயணிகள் இருக்கையில் அமர்ந்து செல்ல முடியாதநிலையில் இதன் வீடியோ வைரலாகிறது . பழநியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது .அப்போது பழநி பஸ் ஸ்டாண்டிலிருந்து இருந்து ஒட்டனைபுதுார் சென்ற டவுன் பஸ்சில் மழை நீர் வழிந்தது. தண்ணீர் அதிக அளவில் விழுந்ததால் பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அனைவரும் மழை நீரில் நனைந்தபடி பயணம் செய்தனர்.இதில் பஸ்சில் பயணம் செய்த பயணி எடுத்த வீடியோ வைரலாகிறது. பழநி பகுதியில் ஓடும் பஸ்களில் பல பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதால் இந்நிலை ஏற்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர். அதிகாரிகள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை