உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல்லிலிருந்து வெளி மாவட்டத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மதுரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்,பி., விஜய கார்த்திக்ராஜிற்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., ஜெகதீசன் மேற்பார்வையில் திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் கீதா, எஸ்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் திண்டுக்கல் கொட்டப்பட்டி பிரிவு அருகே நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில் ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. போலீசார் மினிலாரியை ஓட்டிவந்த சுக்காம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயனை 33,கைது செய்து 1560 கிலோ ரேஷன் அரிசி,மினிலாரியை பறிமுதல் செய்தனர். கொட்டப்பட்டியை சேர்ந்த சதீஷ்,என்பவர் மீதும் வழக்கு பதிந்து போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை