உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரேஷன் அரிசி கடத்தல்: 4 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்தல்: 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 2500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுணா, எஸ்.ஐ., ராதா தலைமையிலான போலீசார் திண்டுக்கல் பழநி ரோடு கொட்டப்பட்டி பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் 3 சரக்கு வாகனங்கள் வேகமாக செல்ல முயன்றது. போலீசார் வாகனங்களை மடக்கி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிந்தது. கடத்தலில் தொடர்புடைய வடமதுரை தும்மலக்குண்டு பகுதியை சேர்ந்த செல்வமணி26, தாடிக்கொம்பு முருக பாண்டி24, திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அருண்பாண்டியன் 24, விருதுநகர் மாவட்டம் வெங்கட்ராமன் 29, உள்ளிட்ட நால்வரை போலீசார் கைது செய்து,2500 கிலோ ரேஷன் அரிசி, 3 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை