உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில்  ஆக்கிரமிப்பு நிலத்திற்கு வாடகை; அறங்காவலர் குழு தகவல்

கோயில்  ஆக்கிரமிப்பு நிலத்திற்கு வாடகை; அறங்காவலர் குழு தகவல்

திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அந்நிலத்திற்கு வாடகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக முள்ளிபாடி கிராமத்தில் 45 ஏக்கர் நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலத்தில் அக்கிராமத்தினர் விவசாயம் செய்வதோடு வீடுகள் கட்டி உள்ளனர். இவர்களுக்கு அறநிலையத்துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதையடுத்து கிராமத்தினர் 200க்கு மேற்பட்டோர் கோயில் வந்து நிலத்தை ஒப்படைப்பதாகவும், தங்களின் வாழ்வாதாரம் காக்க வரும் காலத்தில் நிலத்திற்கான வாடகை ஒப்பந்தம் பெற்றுக் கொள்ள வேண்டும் என மனு அளித்தனர். கோயில் அறங்காவலர் குழுவினர் கலந்தாலோசித்து முடிவை தெரிவிப்பதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை