உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு

வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு

திண்டுக்கல்,: காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜான் பாஸ்டின் டல்லஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் சுகந்தி ,அரசு ஊழியர் சங்க கலெக்டர் அலுவலக கிளைச் செயலர் ராஜாமணி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி பேசினர். ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட இணைச் செயலர் விஜயராகவன் தலைமை வகித்தார். தாசில்தார் சுதா லீலாவதி முன்னிலை வகித்தார். நிலக்கோட்டை:வருவாய்த்துறை பணியிடங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில்நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், பணி புறக்கணிப்பு , தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் பாலகுருநாதன் தலைமை வகித்தார்.ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. வட்ட கிளை தலைவர் சிவனேஷ் தலைமை வகித்தார். தாசில்தார் பழனிச்சாமி, தனி இடத்து துணை தாசில்தார் நந்தகோபால், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயலாளர் மணிமாறன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி, மாவட்ட இணைச்செயலாளர் மகாராஜா, மாநிலத் துணைத் தலைவர் மங்களப் பாண்டியன் பேசினர். மாவட்ட செயலாளர் அங்குச்சாமி நன்றி கூறினார்.பழநி : பழநியில் மாவட்ட துணைத் தலைவர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. வட்டக்கிளை தலைவர் உஷா, வட்டக்கிளை செயலாளர் மாயவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ