மேலும் செய்திகள்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8.50 லட்சம் மோசடி
11-Nov-2025
திண்டுக்கல்: கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு ஆலடிப்பட்டியை சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி நாகலெட்சுமி 50. இவர் போலீஸ் எஸ்.பி.,பிரதீப்பை சந்தித்து புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: சில மாதங்களுக்கு முன்பு முகநூலில் அரசு வேலை தொடர்பாக விளம்பரம் வந்தது. அதில் இருந்த அலைபேசி எண்ணுக்கு எனது கணவர் தொடர்புகொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய ராஜா என்பவர், கார்த்திகேயன் என்ற கவுரிசங்கரை அறிமுகம் செய்தார். எனது மகன் அஸ்வின் ஸ்ரீராமுக்கு திருச்சி விமான நிலையத்தில் மேலாளர் வேலையும், உறவினர் மகள் கீர்த்தனாவுக்கு உதவியாளர் வேலை வாங்கி தருவதாகவும் கவுரிசங்கர் கூறினார். அதை நம்பி, விவசாய நிலத்தை விற்றும், நகைக் கடன், வீட்டுக்கடன் பெற்றும் பல்வேறு தவணைகளாக ரூ.92 லட்சத்து 11 ஆயிரத்து 308 கொடுத்தோம். பணி நியமன ஆணை இருப்பதாக கூறி கடந்த மாதம் ஒரு கவரை கொடுத்தனர். ஆனால் அதில் எனது மகனுடைய ஆதார் அட்டை, பான்அட்டை நகல் மட்டுமே இருந்தது. எனவே மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்' என கூறி இருந்தார். இதன்மீது மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி விசாரணை நடத்துகின்றனர். சம்பந்தப்பட்ட கவுரிசங்கர் மற்றொரு மோசடி வழக்கில் ஏற்கெனவே கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ளார்.
11-Nov-2025