உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரங்கள் வெட்டப்பட்ட இடங்களில் மரக்கன்றுகள்; அதிகாரிகள் அலட்சியத்தால் தொடரும் பாதிப்பு

மரங்கள் வெட்டப்பட்ட இடங்களில் மரக்கன்றுகள்; அதிகாரிகள் அலட்சியத்தால் தொடரும் பாதிப்பு

மாவட்டத்தில் பழநி ரோடு, திருச்சி ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோடு விரிவாக்க பணிகள் நடந்தபோது ரோட்டோரங்களில் நிற்கும் மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டினர். இதனால் பைபாஸ் ரோடுகள் வெறிச்சோடிய பகுதியாக மாறியது. இதுமட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதிப்புக்கும் வாய்ப்பாக அமைந்தது. ரோட்டோர மரங்களை முழுவதும் வெட்டியதால் வாகனங்களிலிருந்து வெளிவரும் கரும்புகை வானத்திற்கு சென்று ஓசோன் படலத்தை பதம் பார்க்கிறது. தொடரும் இப்பிரச்னையால் மக்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. மரங்களின் எண்ணிக்கை குறைந்ததால் மழை அளவும் மாவட்டத்தில் குறையத்தொடங்கியது. இதோடு ரோட்டோர மரங்கள் இருந்தபோது அவ்வழித்தடங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மழை,வெயில் நேரங்களில் ஒதுங்கி நிற்கவும்,ஓய்வெடுக்கவும் முடிந்தது. ஆனால் தற்போது இதுபோன்ற சந்தர்ப்பங்கள் அமையாமல் மரங்களை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பறவைகள் கூடுகள் கட்டுவதற்கு இடமில்லாமல் இனமே அழியும் தருவாயில் வருகிறது. பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் ரோட்டோரங்களில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக வேறு மரக்கன்றுகளை நடுகின்றனர். இருந்தபோதிலும் பொது மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. மரங்களை வெட்டிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோடு பணிகள் முடிந்ததும் சென்று விட்டனர். ஒவ்வொறு நாளும் அவ்வழித்தடத்தில் பயணிக்கும் மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பை சந்திக்கின்றனர். ரோட்டோரங்களில் எங்கெல்லாம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதோ அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்...........


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி