உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அந்தோணியார் சர்ச் விழாவில் சப்பர பவனி

அந்தோணியார் சர்ச் விழாவில் சப்பர பவனி

வத்தலக்குண்டு : சின்னுபட்டி அந்தோணியார் சர்ச் திருவிழா ஜன. 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் வத்தலக்குண்டு தோமையார் சர்ச் பாதிரியார் ஜான் சுந்தரம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அருகில் உள்ள மஞ்சள் ஆற்றுக்கு பொங்கல் பானையுடன் ஊர்வலமாக சென்று மஞ்சள் ஆற்றில் நீர் எடுத்துக் கொண்டு வந்து சர்ச் முன்பாக பொங்கல் வைத்து அந்தோணியாரை வழிபட்டனர். அந்தோணியார் அலங்கரிக்கப்பட்டு மின் அலங்கார சப்பரத்தில் வாணவேடிக்கை, மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ