உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கொள்கையை மறந்த பட்டியல் இன கட்சிகள் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் வருத்தம்

 கொள்கையை மறந்த பட்டியல் இன கட்சிகள் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் வருத்தம்

வடமதுரை: பட்டியல் இன மக்களுக்காக துவக்கப்பட்ட சில கட்சிகள் தற்போது கொள்கை யையும், அந்த மக்களையும் மறந்து செயல்படுகின்றன என அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் இளமுருகு முத்து பேசினார். அய்யலுாரில் நடந்த சட்டசபை தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: சுதந்திரத்திற்கு பின்னர் பட்டியல் இன மக்களுக்காக துவக்கப்பட்டதில் அம்பேத்கர் மக்கள் இயக்கமே முதன்மையானது. இதிலிருந்து பிரிந்தவையே தற்போது இருக்கும் பட்டியல் இனம் சார்ந்து இயங்கும் பல கட்சிகள். ஆனால் அவை அதன் கொள்கையை, அந்த மக்களையும் மறந்து அரசியல் ஆதாய நிர்பந்தத்திற்காக செயல்படுபவையாக மாறி போயின. சில கட்சிகள் வட மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு இருந்தாலும் தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று அதிகாரங்களை பெறுகின்றன. தேசிய, மாநில கட்சிகளுக்கு இணையாக தமிழகம் முழுவதும் பரந்து வளர்ந்திருக்கும் இயக்கத்திற்கு இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. வருகிற தேர்தலில் கண்டிப்பாக உரிய அங்கீகாரம் கிடைக்கும். அதற்கான பணிகளில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுப்பட்டுள்ளோம்.' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி