உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அறங்காலவர் குழு தேர்வு

அறங்காலவர் குழு தேர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியில் பழமை வாய்ந்த காளியம்மன், பகவதியம்மன் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கான அறங்காவலர் குழு உறுப்பினர் தேர்தல் மாவட்ட அறங்காவலர் குழு நியமன தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. தலைவராக மூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். உறுப்பினர்களாக மணி, நாகராஜன், காளிதாஸ், லதா நியமனம் செய்யப்பட்டனர். மேயர் இளமதி ஆணை வழங்கினார். கவுன்சிலர் அருள்வாணி, தி.மு.க. கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார், வார்டு செயலாளர் பிரபு, சுப்ரமணியசுவாமி, கோயில் தலைவர் மாரி, ஊர் நாட்டாண்மைகள் ராஜூ, கார்த்திக் யாதவ் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை