உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரம் விழுந்து கடைகள் சேதம்

மரம் விழுந்து கடைகள் சேதம்

பழநி : பழநி கொடைக்கானல் ரோடு கிரி வீதி இணைப்பு சாலை பகுதியில் பலத்த காற்று வீசியதால் மரம் விழுந்து சாலையோர கடைகள் சேதமடைந்தது. பழநி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கிரி வீதி, சிவகிரி பட்டி பைபாஸ் ரோடு, கொடைக்கானல் ரோடு இணைப்பு சாலை பகுதியில் மரம் காற்றில் சரிந்தது. அப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் கடை அமைத்திருந்தனர் அதில் 3 கடைகள் மீது மரம் விழுந்தது. அப்போது கடைகள் திறக்கப்படாமல் இருந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நெடுஞ்சாலை துறையினர் மரத்தை அகற்றி சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை