உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேடசந்துார் ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

வேடசந்துார் ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

வேடசந்துார் : வேடசந்துார் ஒன்றியம் தட்டாரப்பட்டி ஊராட்சியில் உள்ள மூப்பனார் நகரில் நுாறு குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள குடிநீர் போர்வெல்லில் போதிய தண்ணீர் இல்லாமல் உள்ளது. அதுமட்டுமின்றி மின் மோட்டார் பழுதடைந்ததால் அங்குள்ள குடிநீர் தொட்டியில் ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலை நீடித்தது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். இதனால் கோபமான மக்கள் வேடசந்துார் ஒன்றிய அலுவலகம் முன் காலி குடங்களை கையில் பிடித்தவாறு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர்,பி.டி.ஒ., க்கள் அங்கு இல்லாத நிலையில் ஊழியர் பாஸ்கரன் பொதுமக்களிடம் சமாதானம் பேசி, விரைவில் குடிநீர் வழங்குவதாக கூறியதை தொடர்ந்து முற்றுகை கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை