உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டை ஆக்கிரமிக்கும் டூவீலர்களால் தினம் தினம் அவதி

ரோட்டை ஆக்கிரமிக்கும் டூவீலர்களால் தினம் தினம் அவதி

ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்ட் சுற்றிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். உள்ளூர் ,வெளியூர் செல்வதற்காக பயணிகள் தினமும் அதிகமாக வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள திண்டுக்கல் ரோட்டில் டூவீலர்களை பாதையை வழிமறித்து நிறுத்துவதால் பயணிகள் ,பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்துவதோடு இவர்கள் மீது போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கையும் அவசியமாகிறது ................நடவடிக்கை எடுக்கிறோம்ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வானங்கள் மீது தினமும் வழக்குப்பதிவு செய்து வருகிறோம். ரோடு அகலப்படுத்தப்படும் பணி முடிந்துள்ளதால் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் பகுதியை ஒதுக்க உள்ளோம். ரோட்டுப் பகுதியில் மக்கள் நடப்பதற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.ராஜன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர், ஒட்டன்சத்திரம் .....................................


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை