உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மாணவர் திறன் திட்டம் அவதியில் ஆசிரியர்கள்

 மாணவர் திறன் திட்டம் அவதியில் ஆசிரியர்கள்

திண்டுக்கல்: அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் திறன் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கு தனி பாடத்திட்டத்திலும், மற்ற மாணவர்களுக்கு வழக்கமான பாடத்திட்டத்திலும் கற்பிக்க வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். ஆறு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களின் மொழிப்பாடத்திறன், கணிதம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் திறன் திட்டம் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு தனி பாடத்திட்டத்தின் வாயிலாக சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் தனித்தனி பாடத்திட்டத்தின் மூலம் திறன் மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் கற்பிப்பது சிரமத்தை ஏற்படுத்துவதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர். ஆசிரியர்கள் கூறியதாவது : வகுப்பு நேரத்திலே இரு பாடத்திட்டத்தில் நடத்துவது என்பது இயலாத காரியம். திறன் மாணவர்கள் 100 க்கு 70 மதிப்பெண்கள் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்வது முடியாத ஒன்று. இதனால் 6 முதல் 9 வரை வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர். அரையாண்டு, பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வதும் சவாலாக உள்ளது. ஆசிரியர்களுக்கு எமிஸ் துவங்கி கலைத்திருவிழா, மன்ற செயல்பாடுகள் என பல புகுத்தப் பட்டுள்ளது. மேலும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் பலவற்றில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளதால் திறன் போன்ற திட்டங்கள் தேவையாக உள்ளது. காலிபணியிடங்களை நிரப்பினாலே திறன் மாணவர்களை தேட வேண்டிய அவசியம் இருக்காது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை